Pages

dimanche 15 septembre 2024

கவிக்கோ துரை. வசந்தராசனார்

 


கவிக்கோ துரை. வசந்தராசனார்

71 ஆம் அகவை வாழ்த்து

 

பல்லாண்டு வாழ்க!

 

வண்ணத் தமிழ்காக்கும் பண்ணைத் திருவூரார்

எண்ண மனைத்தும் இனிப்பாகும்! - அண்ணாவின்

பொன்னெறி போற்றும் புகழ்ப்புலவர் வாழியவே

இன்னெறி யாவும் இசைத்து!

 

துாய கவிக்கோ துரைவசந்த ராசனார்

நேய மனத்துள் நிறைந்திருக்கும் - தாயன்பு!

பாட்டரசன் பாடுகிறேன் பல்லாண்டு! காண்கவே

நாட்டரசர் சூட்டும் நலம்!

 

விந்தைமிகு சந்தம் விளையாடும்! எந்நாளும்

சிந்தைமிகு வண்ணம் செழித்தாடும்! - செந்தமிழின்

தொண்டர் கவிக்கோ துரைவசந்த ராசனார்

கண்டார் கவிதைக் களம்!

 

பகுத்தாறிவு வாழ்வும், படிப்பகமும் கொண்டு

தொகுத்தறிவு தந்தார் தொடர்ந்து - மிகுத்தபுகழ்

தோற்றும் கவிக்கோ துரைவசந்த ராசனார்

ஆற்றும் பணியே அழகு!

 

வாழ்க வளத்துடனே! வண்டமிழ்ச் சீருடனே!

சூழ்க நிறைந்து நலமெல்லாம்! - ஏழ்பிறப்பும்

தொன்மைக் கவிக்கோ துரைவசந்த ராசனார்

நன்மை புரிவார் நமக்கு!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

15.09.2024

4 commentaires:

  1. பாட்டரசரின் கவிதைகள் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன. வெண்பா வகைகள், ஆசிரியப்பா வகைகள், இலக்கண விதிகளின்படி பாடப்பட்டுள்ள பாடல்கள் இன்றும் என் வகுப்பறையில் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக கொடுத்து வருகிறேன். கவிஞர் கி. பாரதிதாசன் வாழ்க வளர்க.

    RépondreSupprimer
  2. பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயா அவர்களின் மரபுக்கவிதைகள் எதிர்கால தலைமுறையினருக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். என் தமிழ் வகுப்பறைகளில் இலக்கணப்பாடவேளையின் ஐயாவின் பாடல்கள் மாணவர்களுக்கு எடுத்துகாட்டுகளாக வழங்குகிறேன். மாணவர்களுக்கு புரிந்து கொள்ளும் எளிய நடை, இனிய சொற்கள். வாழ்க கவிஞர் கி. பாரதிதாசன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்

      நனிநன்றி

      Supprimer