இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
சாதி சமயப் பிரிவகற்ற! எவ்விடத்தும்
நீதி நிலைத்திருக்க! நெஞ்சத்தைச் - சோதியாய்த்
துாப மணம்பரப்ப! தொண்டாற்ற வந்திடுக
தீபா வளியே திரண்டு!
02.11.2013
happy deepavali.
RépondreSupprimersubbu rathinam
www.vazhvuneri.blogspot.com
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மிக அருமை, இனிமை. பாராட்டுக்கள்.
RépondreSupprimerதங்களுக்கு எந்தன் ‘தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்’.
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
RépondreSupprimerஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....
RépondreSupprimerதூய மாயவன் துணையிருக்க
RépondreSupprimerதொலந்திடட்டும் துன்பங்கள்!
அழகிய அருமையான வெண்பா ஐயா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் கவிஞரே!..
RépondreSupprimerஉங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
சிறந்த பதிவிது.
RépondreSupprimerதங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!
RépondreSupprimerஇனிப்புச் சுவையாய் எழுதிய வெண்பா
பனிப்பூ வெனஒளிரும்! பாங்காய் - மனப்பூ
விரியும்! மதிப்பூ மணக்கும்!நல் விந்தை
புரியும் தமிழைப் பொழிந்து!
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
RépondreSupprimerமாயவனே!
RépondreSupprimerஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி .....அருமை...அருமை!
இனிய தீப ஒளித் திரு நாள் வாழ்த்துக்கள்!