Pages

dimanche 4 novembre 2012

கவியரசு கண்ணதாசன்




கண்ணதாசன் பாக்கள்


சொல்லழகும் பொருளழகும் பொலியும் பாக்கள்
     சுடரமுதை நம்நெஞ்சுள் பொழியும் பாக்கள்
நல்லழகாம் அணியாவும் மின்னும் பாக்கள்
     நற்றமிழைத் தேனடையாய் நல்கும் பாக்கள்
எல்லோரும் உளமுருகிக் கேட்கும் பாக்கள்
     ஈடில்லாத் தமிழ்ப்புகழைக் காட்டும் பாக்கள்
கல்லாரும் கற்றவரும் களிக்கும் வண்ணம்
     கமழ்கின்ற கண்ணதாசன் பாக்கள் வாழி!


10-05-2002

------------------------------------------------------------------------------------------------------
 



புதுமைக் கவிஞர் வாணிதாசன்                    


புதுவைக்குப் புகழ்சேர்த்த புலவர்! இன்பப்
     பூந்தமிழின் சீர்காத்த மறவர்! வாழ்வில்
பொதுமைக்கு வழிபடைத்த அன்பர்! வல்ல
     புரட்சிப்பா வேந்தர்தம் தோழர்! நன்றாய்
எதுகைக்கும் மோனைக்கும் எழில் கொடுத்தே
     இன்னமுத கவிபடைத்த கவிதைச் செல்வர்!
புதுமைக்கும் இனிமைக்கும் காட்டாய் மின்னும்
     பொற்புடைய வாணிதாசர் நூல்கள் வாழி!


04.06.2002

------------------------------------------------------------------------------------------------------

Aucun commentaire:

Enregistrer un commentaire