Pages

dimanche 25 novembre 2012

எருமைகளே!



உயிரெனக் காப்பேன்!
(கட்டளைக் கலித்துறை)

அன்னைத் தமிழே! அமிழ்தின் சுவையே! அருள்வடிவே!
முன்னை முகிழ்த்த முனிவன் வளர்த்த முதுமொழியே!
என்னை மயக்கும் எழிலாய் மிளிரும் இளையவளே!
உன்னை எனதார் உயிரெனக் காப்பேன் உவந்தினிதே!
           
தெளிதமிழ் இதழ் 14.04.1994

தமிழினில் போடுக கையெழுத்தே!

தலைப்பெழுத் தாங்கிலம் போட்டிடும் ஒப்பம் தமிழிலில்லை
நிலப்படத் தேநாம் தமிழர்! இழிந்த நிலையிதென்று
புலப்பட வில்லையா? மாடாய்க் கிடந்தது போதுமடா
கலப்பட மற்ற தமிழினில் போடுக கையெழுத்தே
                 
தெளிதமிழ் இதழ் 13.02.1996

உறங்கிக் கிடக்கும் எருமைகளே!

எதிர்த்து மறியலும் பேரணி யும்திரண் டிவ்வரசை
மதித்து மடலும் வரைந்து சிறையும் புகுந்துவந்தோம்
இதற்கும் பிறகும் தமிழ்தனை ஆட்சியில் ஏற்றமறுத்(து)
எதற்கும் அசையா துறங்கிக் கிடக்கும் எருமைகளே!
                 
தெளிதமிழ் இதழ் 17.11.1995

3 commentaires:

  1. கலப்பட மற்ற தமிழினில் போடுக கையெழுத்தே

    எருமைத்தனம் பழிக்கும் அருமையான ஆக்கம் ..

    RépondreSupprimer
  2. தமிழ்ப் பற்று....

    நான் இன்றும் கையெழுத்து தமிழில் தான் போட்டுக்கொண்டு இருக்கிறேன் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்...

    RépondreSupprimer
  3. அருமையாகச் சொன்னீர்கள்... மகிழ்ச்சி...
    த.ம. 1

    RépondreSupprimer